உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 35.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




சிறுவர் பாடல் திரட்டு

5. இரண்டுமூன் றாய்ப்பல தளிர்கள் விட்டு - நன்றாய்த் திரண்டு வளர்ந்தன தினந்தினமும்

6. நாற்றுகள் அரையடி ஆனவுடன் - நீக்கி வெற்றிடம் நீர்விட்டு நட்டுவைத்தேன்

7. இலைகளும் கிளைகளு மாகவாய்ந்து - நல்ல விலையான காய்களைக் காய்த்தனவே!

28ஆம் பாடம்

மாணவர் காலை வேலை

'ஜோர் ஜோர் ஜோர் ஜோர் ஜோர் மைனா' என்ற மெட்டு காலையி லெழுந்திருந்து கடவுளைத் தொழுதிடாய் சீலச் செயல்களெல்லாம் சீர்பெற முடித்திடு

1.

2.

பல்லைப் பொடியால் தேய்த்துப் பாலைப்போல் விளக்கியே நல்ல நீரில் குளித்து நல்கும் உணவை உண்ணுவாய்

3. பாடத்தைப் படித்து நல்ல பயனை மனத்தில் பதித்தபின் நாடிப் பெற்றோர்க்கு வேலை நயந்து திருந்தச் செய்குவாய் வேளை யானவுடனே விரும்பிப் புத்தகத்துடன்

4.

சால விரைந்துபாட சாலைக்குச் செல்லுவாய்.

95