உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 35.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




94

செந்தமிழ்க் காஞ்சி

1.

26ஆம் பாடம்

குழந்தைக்குச் சோறூட்டல்

தின்னாய் திருக்குழந்தை - இந்தத் தீஞ்சோற்றைத் தின்னாய்கொஞ்சம்

2. அப்பனுக்கு இரண்டுருண்டை ஆசையுடன் தின்னாய் நீ

3. அன்னைக்கும் ஓர்கவளம் - நீ அன்பாகத் தின்பாயே

4. அக்காளுக்கு ஓர்பிடிதான் நீ அழகாகத் தின்பாயே

5. அண்ணனுக்கு ஒரேஒரு வாய் ஆனந்தமாய்த் தின்பாயே

வெகு

-

இன்று

6. நாய்வந்து தின்றுவிடும் - அதற்குள் நன்றாகத் தின்றுகொள்ளேன்

1.

1.

இன்னும் இருபருக்கை – நீ இன்பமுடன் தின்றுவிடு.

27ஆம் பாடம்

கத்தரித் தோட்டம்

'இந்த உடலை நம்பி' என்ற மெட்டு

கத்தரிக்காய்த் தோட்டக் கதையைக் கேளாய் – பத்திரமாய் மனம் பதியக் கேளாய்.

2. மண்ணை முதல்வெட்டிக் கரம்பையிட்டு – கட்டி மண்ணை உடைத்தபின் உரத்தையிட்டேன்.

3. மேடு பள்ளமின்றி மிகத்திருத்தி – மிக மேலான பழத்துள்ள விதை விதைத்தேன்.

4. காலையும் மாலையும் தண்ணீர்விட - நாளையி லேசிறு முளைகள் கண்டேன்.

இது

இது