உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 35.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




102

செந்தமிழ்க் காஞ்சி

கொண்டிருந்தனவே என்பதை எண்ணும்போது நெஞ்சு வலிக்கிறது. திருச்சபையில் காணப்பட்ட பொருத்தமில்லாத மேலைநாட்டு வாடைகள் பாவாணர் அவர்களை ஒரு ஓரத்தில் துரத்திவிட்டனபோலும். அவரோ மொழியாராய்ச்சி என்னும் கடலில் அரியாசனம் அமைத்துக் கொண்டு விட்டார்.

பாட்டில்லாத

பாட்டுகள் திருச்சபையில் படையெடுத்துக் கொண்டிருக்கிற இந்தக் காலத்தில் பாட்டெனும் பாட்டாக இந்த நூல் வெளி வருகின்றது. பாவாணரவர்கள் எக்காலத்திலோ தம்முடைய இளமையில் படைத்து அச்சிட்டிருந்த இந்த நூலின் நலிந்த படி ஒன்று எங்கோ மறைந்து கிடக்க, அதனைத் தேடிக்கொணர்ந்து தமிழுலகிற்கு நல்குகின்ற டாக்டர் வீ. ஞானசிகாமணி அவர்களைத் தமிழ்கூறும் நல்லுலகம் பாராட்ட வேண்டும்; தமிழ்த் திருச்சபை அவருக்கு நன்றி கூறிட வேண்டும். இதுவரை வெளியிடப்படாத மகாகவி கிருஷ்ணப்பிள்ளையவர்களின் அரிய நூல் களையும் இவர்கள் வெளியிட்டிருக்கிறார்கள், பொருள் வரவு கருதாமல்.

இவ்வாறு அரிய நூல்களை யாதொரு பொருள் வருவாயையும் கருதாமல் வெளியிடுவதுமன்றி, ஞானசிகாமணி அவர்கள் கிறித்தரசர் தமிழ்ப் பேரவை என்ற அமைப்பின் செயலாளர் பதவியையும் ஏற்றுப் பணிபுரிந்து வருகிறார்கள். கடவுளின் அருள் அவரைச் சூழ்வதாகுக. வாழ்க பாவாணர் நற்பணி!

சென்னை கிறித்தவக் கல்லூரி, தாம்பரம், சென்னை-59

பேரா.பொன்னு. ஆ. சத்தியசாட்சி, எம்.ஏ., பி.ஓ.எல்.

ஏப்பிரல் 1981