உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 35.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




104

செந்தமிழ்க் காஞ்சி எடுத்துக் கூறினார். கிறித்தவர்களும் தூய தமிழைப் போற்ற வேண்டும் என்றும், அதற்கு வாய்ப்பாக நல்ல தமிழ்மொழியில் பைபிளை மொழியாக்கம் செய்வதற்கு அவர் மேற்கொண்ட முயற்சியில் அவ்வளவு வரவேற்பும் வாய்ப்பும் காணா நிலையில் அவரது மனத்தை தமிழ்மொழி, இலக்கிய ஆராய்ச்சியில் ஈடுபடுத்தியதையும் அறிவித்தார்.

என்னிடத்தில் கொடுக்கப்பெற்ற கிறித்தவக் கீர்த்தனம் என்னும் அவருடைய நூலில் நான் விருப்பம் காட்டி, நூற்பொருளின் சிறப்பினைக் கூறியபோது அதனை இயலுமேல் வெளியிட்டுப் பயன்படுத்திக் கொள்ளவும் அனுமதித்தார். அவர் உயிரோடு இருந்த நாள்களிலேயே அதனை வெளியிடுவதற்குப் பலமுறை நான் முயன்றும் வெற்றி பெறவில்லை.

சில மாதங்களுக்கு முன்னால் பூக்கூடை இதழுக்கு, அதன் ஆசிரியர் திரு. இராச்குமார் அவர்களுடன் பாவாணரிடம் பேட்டி காணச் சென்றிருந்தேன். அந்தப் பேட்டி பூக்கூடையில் 1980 டிசம்பர், 1981 சனவரி ஆகிய இரு இதழ்களிலும் வெளிவந்தது. இறுதியாக அவருடன் நீண்ட நேரம் பேசுவதற்குக் கிட்டிய வாய்ப்பு அதுதான். பேட்டியை முடித்து வீட்டைவிட்டு வெளியே வந்தபோது, முன்னரும் சந்திக்கும் போதெல்லாம் சொல்வதுபோல், 'செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலியை நிறைவு செய்வதற்காகவே கடவுள் எனக்கு இந்த நல்ல உடல் வளத்தை அருளிச் செய்துள்ளார். தொடர்ந்து எனக்காக மன்றாட்டுச் செய்யுங்கள்,” என்று கேட்டுக்கொண்டார். அப்பொழுதும் அவரது கிறித்தவக் கீர்த்தனம் நூலை விரைவில் வெளியிட எண்ணியிருப்பதாகக் கூறிவந்தேன். ஆனால், அகரமுதலிய நிறைவடைவதற்கு முன்னர் அவருடைய வாழ்வு இவ்வுலகில் நிறைவடைந்துவிட்டது. உலகத் தமிழ் மாநாட்டிற்கு நான் சென்ற நாளிலே, பேருந்து நிலையத்திலேயே அவர் நோயுள்ள செய்தியைக் கேள்விப்பட்டு, மதுரை அரசினர் மருத்துவமனையில் சென்று கண்டேன். அவர் என்னைப் பார்க்கும் நிலையிலோ, பேசும் நிலையிலோ இல்லை. அமைதியாக அவர் அருகில் நின்று இயேசு பெருமானின் திருப்பெயரை முன்னிட்டு மறாட்டுச் செய்துவிட்டு மதுரையிலிருந்து விரைவாகவே சென்னை திரும்பிவிட்டேன். சில நாள்களுக்குள்ளே அவர் உயிர் உலகத்தைவிட்டுப் பிரிந்த செய்தி வந்துவிட்டது. “கர்த்தாவே, தன் நடைகளை நடத்துவது நடக்கிறவனாலே ஆகிறதல்லவென்றும் அறிவேன்” (எரேமியா 10 : 23) என்பது திருவாக்கு.

பாவாணருடைய உயிர் இவ் வுலகத்தைவிட்டுப் பிரிந்த பின்னரே