உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 35.pdf/165

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




கிறித்தவக் கீர்த்தனைகள்

51

ஆட்டுக்குட்டியானவரின் கலியாணம்

இராகம் காம்போதி

தாளம்

முன்னை

மழவர்மிகுந் தேவசேனை மகிமையுடன் கூடிமண முழவறைந்தார் திசைகளெல்லாம் முழங்கிடவே யீருலகும் விழவயரு மென்றேயொரு விளம்பரமுஞ் செய்ததென்னே அழகுயரும் ஆட்டுக்குட்டி யானவர்க்கே கல்யாணம்!

பரமபதந் தனைவிட்டுப் பாரின்மிக ஏழையாகிச் சிரமமுடன் பாரந்தாங்கிச் சிரஞ்சாய்க்க இடமின்றி மரமதிலே மடலேறி மணமகளை மீட்டெழுந்த அருவரனாம் ஆட்டுக்குட்டி யானவர்க்கே கலியாணம்!

155