உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 35.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




16

செந்தமிழ்க் காஞ்சி

3. குழவிகள் வாயினுங் குணம்பெறுந் தமிழே கோதறும் பொருட்கருக் கொண்டதுந் தமிழே அழகிய நடுநிலை அறைமறைத் தமிழே அனையினுஞ் சிறந்திடும் அரும்பெருந் தமிழே.

14. தமிழ் அரசியல் மொழியானால்தான் தமிழ்நாட்டிற் குச் சுயவரசாகும்

‘பச்சைமா மலைபோல் மேனி' என்ற மெட்டு (காம்போதி) 1. ஆங்கிலர் எவரு மின்றி அலுவல்க ளனைத்தும் நம்மோர் தாங்கினும் நம்கை யால்பல் தாரமும் செய்வ மேனும் தேங்கமழ் பொதிகைத் தென்பால் தென்னவன் திருவவைக்கண் ஓங்கிய தமிழின் றேல்வே றொன்றையும் உகந்திடேனே.

2.

வெள்ளையர் எவரு மின்றி விழுமிய தேசமேனும் சள்ளைசச் சரவுநீங்கிச் சமநிலை யாவமேனும்

கள்ளையுண் டளிகள் பாடுங் கழனிசூழ் பாண்டிநாட்டுத் தள்ளையாம் தமிழின்றேல்எத் துணையும்நான்

உகந்திடேனே.

3. வறுமையே சிறிது மின்றி வளம்பெற வாழ்வமேனும் மறுமையாய் இந்துதேசம் மாணவோர் குலமானாலும் செறுமைசேர்ந் தாலிவீழும் செந்தமிழ்க் கன்னிநாட்டு நறுமையாம் தமிழே தாழின் நானெதும் உகந்திடேனே.

4. என்றனக் கிந்துதேசத் திறைமைவந் தெய்திற்றேனும் என்றமர் அமைச்சராகி என்பணி கேட்பரேனும்

குன்றுயர் பொதிகைவாழும் குறுமுனி நயந்த செம்மை துன்னுபைந் தமிழின்றேல்எத் துணையும்நான் உகந்திடேனே.

5. செப்பிய படைகள் மூன்றுஞ் சிறந்துபன் னாட்டுச் சங்கம் ஒப்பிய தலைமை யாகி ஓங்கினும் பரத கண்டம்

துப்புறழ் கொவ்வைச் செவ்வாய்த் துடியிடைத் தோகைமாதே தப்பருந் தமிழின்றேலெத் தனையும்நான் உகந்திடேனே.