உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 35.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




18

செந்தமிழ்க் காஞ்சி

17. ஜாதிப் பிரிவினையால் தமிழுக்கு வந்த கேடு ‘ஆண்டிப் பண்டாரம்' என்ற மெட்டு

ஜாதி வித்தியாசம் - தமிழ்த்

ப.

தாரணியே நாசம்.

ஒற்றுமை யாயிருந்து உன்னத நாகரிகம்

பெற்றுத் திகழ்ந்தவர்க்குள் பிரிவினையுண் டாய்விட்டதே

2

வடமொழி வார்த்தைகளே வல்லவை என்றுசொல்லித்

(ஜாதி)

திடமுளதென் சொற்களைத் தெரியாமல் மறைத்துவிட்டார் (ஜாதி)

3

பாணரென்னும் இசைக்குலத்தைப் பாழ்படவே தள்ளியதால் மானமுள்ள இசைத்தமிழும் மறைத்திட்டதே வழங்காமல்

4

ஏனை மொழிக்களிப்பர் ஏராள மாகப்பணம்

(ஜாதி)

தேனார் தமிழ்க்களிக்கத் தினையளவு மில்லைமனம்

5

(ஜாதி)

ஆனைதனைக் கட்டத்தொடர் தானெடுத்துக் கொடுப்பதைப்போல் ஏனைமொழிக் கிணங்கிஇருந் தமிழைத் துரத்துகின்றார்

6

தென்னாட்டு நாகரிகம் தெரியாமல் பழிதூற்றி

மன்னாட்டு நாகரிகம் மாணதென மகிழ்ந்துரைப்பார்

7

தாய்மொழிக ளில்தமிழே தலைமையா யிருந்தாலும் சேய்மொழி யெனத்திருத்தம் செய்யாமல் ஒதுக்கிவிட்டார்

8

தேசுபெறு கலைநூல்கள் தெரியாமல் ஒழித்ததுடன் பாஷையையுங் கெடுக்கவின்

(ஜாதி)

(ஜாதி)

(ஜாதி)

பலமாய்மார் தட்டுகின்றார் (ஜாதி)