உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 35.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




செந்தமிழ்க் காஞ்சி

18. தமிழ்த் தொண்டர் படையின் வஞ்சி நடைப்பதம்

'ஓம் நமச்சிவாயனே' என்ற மெட்டு

தாரணியி லெம்மொழியுந் தமிழுக்கிணை யாகுமோ தாய்மொழியைப் புன்மொழிக்குத் தள்ளிவிடல் நீதமோ பார்ப்பனர் பலர்தமிழ்க்குப் பண்ணினர் துரோகமே கூர்த்தறிவில் லாப்பிறரும் கொண்டனர்இவ் ரோகமே. பெற்றதாயிற் பிறந்தநாட்டிற் பெரிதுகாணும் தாய்மொழி பற்றலர் கூடித்தமிழைப் பழிக்கவழி தேடினர்

இலக்கண வரம்புகொண்ட தில்வுலகில் எம்மொழி, விலக்கமின்றி எவ்வகுப்பும் வித்தைகற்ற தெம்மொழி,

இந்துமுஸ்லீம் கிறிஸ்தவர்க்கும் ஏனைப்பௌத்த ஜைனர்க்கும் எந்தமதத் தார்க்கும்வேதம் இருப்பதாகும் எம்மொழி, பக்ஷபாதக மில்லாமல் பற்பலவாம் ஜாதிக்கும் தக்கநீதி கூறும்நல்ல தருமநூலே திருக்குறள் ஆதியறி வாராதேஎம் அருமையான தொன்மொழி வாதவூரர் நைந்துருக வசிகரித்த தென்மொழி கம்பரிளங் கோவடிகள் காவியந்தேன் பொழியுமே உம்பர்அமிர் தம்அதற்கு உவமையின்றி ஒழியுமே வீரமா முனிவர் போப்பு வித்தகமெய்க் கால்டுவல் வேறுதேச மேனும்வாஞ்சை விஞ்சினர்செந் தமிழின்மேல் செந்தமிழைச் சீரழிக்கச் சிறுவர்மடி கட்டினர் மந்தமாகத் தூங்குந்தமிழ் மக்களே! விழித்தெழும்

தமிழிலன்றி வருமரசு தன்னரசே யாகுமோ? எமரேயின்று ஒன்றுகூடி இந்தியை எதிர்த்திடும். சாதிமத பேதமின்றிச் சகலரும்முன் வாருங்கள் நீதியாய்த் தமிழரசு நிறுவுங்கள்இந் நாட்டிலே எங்கும்இந்தி கட்டாயம்தான் என்பதென்ன அண்டப்பொய் வங்காளத்தில் ஒருநாளும் வைத்திடுவ தில்லையே. இந்தியில்லா ஏனைநாட்டில் இந்தப்பேச்சே யில்லையே மந்தமுள்ள தமிழனைத்தான் மாட்டுகின்றார் வலையிலே தாய்மொழியைத் தள்ளுபவன் தானேபெரிய அடிமையன் வாய்மையா யவற்குவீடு வாய்ப்பதில்லை யென்றுமே, காங்கிரஸ்என் றால்அதற்குக் கங்குகரை யில்லையோ? தீங்கதி லிருந்தால்அதைத் தீர்த்துவிட வேண்டாவோ? பிழைக்கவோ இறக்கவோநீர் பேணிமருந்தை யருந்துவீர்?

19