உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 35.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




22

செந்தமிழ்க் காஞ்சி

21. சமஸ்கிருத நூல்களைப் பயன்படுத்தும் விதம்

1.

2.

3.

4.

'காலுக்குத் தண்டை கொலுசு' என்ற மெட்டு

வடமொழி நூற்கலை வளம் பயன்படுத்தும்

வகைசொல்வேன் ஏற்றிடும் உளம் - கொள்ளீர் விளம் கடினமாம் வடமொழியே - பாஷையும் நன்றாய்க் கற்கப் பத்தாண்டு கழியும் - காலழியும் இறந்தமொழியின் நூல்களை இன்றுயிருடன் இயங்குமொழி பெயர்த்திழை - இன்றேல் பிழை வடமொழி வளரவேண்டும் - என்றால் பழைய வையகம் வந்திட மீண்டும் - வழிகாண்டும்

22. இந்திய பலதேசம் சேர்ந்த ஒரு சிறு கண்டம் ‘சூழ்ந்து சர்க்கா' என்ற மெட்டு

1. இந்தியா ஓர்தேச மென்றே இயம்புவார் அறியார்

முந்தியே நம்முன்னோ ரெல்லாம் மொழிந்தார் பரத கண்டமென

2. இங்கிலீஷ்காரர் பலத்தால் ஏகாதிபத்யம்

இந்தியாவில் வந்ததின்னும் இதற்குளாகா நாடுபல

3. ஜாதி பாஷையொன்றே யானால் சாரும்ஒரு தேசம் பேதமுள்ள பலதேசம் பிறங்கு மிந்தியா கண்டம்

4. சென்னை நாட்டிலுஞ் சிறிய தேசம் எத்தனையோ என்ன காரணத்தினாலும் ஏற்குமோ அவை பிறபாஷை

5. சீனா ரஷ்யா மிகப்பெரிய தேசமானாலும்

காணுமோ நிறம் பாஷையில் கடுகளவுதான் பேதம்

6. அரசியற்கே இந்தியாவில் ஆகும் ஒற்றுமையே பரசு தாய்ப்பாஷை யழியப் பார்த்துக்கொண்டிரார் தமிழர்

7. இந்தியப் பொதுத்தலைமை இந்தி யரசாகும்

ஏனைய மாகாணமெல்லாம் ஏற்குமரசு தாய்மொழியே

8. இந்தியா ஒரே விதமாய் எல்லா விஷயத்திலும்

இருக்க வேண்டுமானால் பலர்க்கே இருமை வண்ணம் பூசிவிடும்.