உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 35.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




செந்தமிழ்க் காஞ்சி

23. இந்தியர்க்கு இன்றியமையாத மூன்று பாஷை 'உஷ்ணத்தேரா' என்ற மெட்டு

ப.

இந்தியர்க்கே மூன்று பாஷை இன்றியமையாதன

து. ப.

முந்தியே தமிழ்மொழிபின் ஹிந்தி மூன்றாவதாம் இங்கிலீஷ்

• 2. 1

தாய்மொழியில் நடந்திடில்தான் தன்னரசாம் உண்மையில் நேயமாக அலுவல்மொழியே நிரம்பக் கற்பர் மாணவர்

2

இந்தி விருப்பப் பாடமாயே ஏற்படுத்தல் நீதியாம் இந்தியால்தான் ஒற்றுமையென் றியம்புவதோ பேதைமை

3

ஆங்கிலத்தில் தான்கால அருங்கலைகள் உள்ளன ஆங்கிலத்தைப் படிப்பதாலே அடிமைத்தனம் ஆகுமோ

(இந்தி)

23

(இந்தி)

(இந்தி)

24. தமிழர்க்குக் கட்டாய இந்திக்கல்வி வேண்டாமை மாங்காய்ப்பா லுண்டு' என்ற மெட்டு

1.

எந்தக் கருத்தையும் இயம்பும் மொழியார்க்கே இந்தியும் ஏதுக்கடி மடந்தாய்! இந்தியு மேதுக்கடி

2. ஏனைய மொழியின்றி இயங்கும் மொழியார்க்கே இந்தியும் ஏதுக்கடி மடந்தாய்! இந்தியு மேதுக்கடி 3. இலக்கியம் நிரம்பவே இருக்கும் மொழியார்க்கே இந்தியும் ஏதுக்கடி மடந்தாய்! இந்தியு மேதுக்கடி

4. ஏற்கெனவே பாடம் இருக்கும் மாணவர்க்கே

இந்தியும் ஏதுக்கடி மடந்தாய்! இந்தியு மேதுக்கடி

5. இந்திக்கும் முற்றும்நேர் எதிராம் மொழியார்க்கே இந்தியும் ஏதுக்கடி மடந்தாய்! இந்தியு மேதுக்கடி

6. எளிய ஒலிகளும் இயம்ப முடியார்க்கே

இந்தியும் ஏதுக்கடி மடந்தாய்! இந்தியு மேதுக்கடி.