உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 35.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




32

ஆலகா லத்துடனே அமிர்தம் வந்தாலும் அன்னம்போல் பிரித்ததை அடைவதே சாலும் அறிவு கலங்கி ஐந்து மொடுங்கி

சாலவே பசித்துடன் சாகின்ற காலும்

தமக்கை தரும் நச்சப்பம் தருவது போலும்

செந்தமிழ்க் காஞ்சி

(தனையே)

35. தமிழ்நாட்டுப் பணத்தால் வடமொழி வளர்த்தல் ‘சுதேச மகமதல்லி' என்ற மெட்டு

ப.

தமிழ்நாட்டுப் பணங்காசும் வடநாட்டு மணம்வீசும் தமிழ்நாட்ட மனங்கூசும் வடசொல் நாட்டத் தினம்பேசும்

உரைப்பாட்டு

சீரான மொழிகளிலே சிறந்த மொழியான செந்தமிழையே

தளர்த்துவந்து

ஈராயிரம் ஆண்டுகளாய் இந்நாட்டுப் பணத்தாலே இறந்த மொழியை வளர்த்துவந்து.

ப.

கட்டாய மாக இந்திக் கல்வி நுழைக்க முந்தி

விட்டார் தமிழைச் சந்தி விரைவி லதற்குக் காலம் அந்தி

உரைப்பாட்டு

பத்திரம்நூல் பூஜைமணம் பத்தினாக சடங்குரையாம்

பலவிதத்தும் வடமொழியைப் பெய்தார்

இத்தமிழ்நாட் டெல்லைதனில் இந்தியையும் புகுத்தவின்று

ஏகோபித்தே கிளர்ச்சி செய்தார்.

தாய்நாடே போற்றி! தமிழ்நாடே போற்றி! தமிழே போற்றி!

தொல்காப்பியர்க்கு வெற்றி! திருவள்ளுவர்க்கு வெற்றி! மாணிக்க வாசகர்க்கு வெற்றி! கம்பருக்கு வெற்றி!