உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 35.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




1. கடவுள் வாழ்த்து

பண்

முன்னை (ஆதி)

கானடா தாளம்

மூவுல குந்தொழும் முத்தொழில் முதல்வா

முன்னிய தமிழிசை யின்னிலை யுறவா முனைந்தருள் வாய்எம் அவா.

2. தமிழே முதல் தாய்மொழி ‘கொலுமவரெகத' என்ற மெட்டு

ப.

தமிழே முதல்தாய் மொழி தன்னிகர் தானே

து. ப.

இமிழ்கடல் சூழுலகில் இருமுது பெற்றோர்பெயர் எழில்தமி ழாகவே இருக்கின்ற வகையானே

(தமிழே)

குமரிநிலத்தென் தோன்றிக் குறிஞ்சி முதல்முந்நிலை

குலவி வளர்ந்தே நாற்பாக் கொண்ட தென்மொழி செம்மை திமிறிய கொடுந்தமிழ் திரவிடமாகி மேலைத்

திகழும் ஆரியம் எனத் திரிந்தது மேனே

(தமிழே)

3. தமிழின்பம்

‘கோரினவர மொசகுமைய' என்ற மெட்டு

ப.

பேரிலுந் தமிழ்இனிமை தங்கும் பேரின்ப வாரி

து. ப.

சாரும் எதுகை மோனை வண்ணம்

சற்றுந் தவறாது நண்ணும்

(பேரிலுந்)