உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 35.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




40

செந்தமிழ்க் காஞ்சி

சீராரும் மொழியின் மும்மை சிறந்த மறையாங் குறளின் செம்மை சிலம்பொடு தனிப்பாடல் சுவையும் செப்புதற் குண்டோ உவமை

தேரும் நல்லகப் பொருளின் இன்பம் திருக்கோவை

திருமாமணி வாசகர் மயங்கும்

எவையும்

கலித்தொகையிற் பொங்கும்

(பேரிலுந்)

4. பழந்தமிழன் பெருமை

‘ரகுபதி ராகவ ராசாராம்' என்ற மெட்டு

1

தமிழா உன்றன் முன்னவனே தலையாய் வாழ்ந்த தென்னவனே அமிழ்தாம் மாரி யன்னவனே அழகாய் முதனூல் சொன்னவனே (தமிழா)

2

பஃறுளி நாட்டிற் பிறந்தவனாம் பகுத்தறி பண்பிற் சிறந்தவனாம் பகையாம் மலையை உறந்தவனாம் பாலும் புலியிற் கறந்தவனாம்

(தமிழா)

3

யாழுங் குழலும் வடித்தவனாம் யாணர் நடமும் நடித்தவனாம்

ஏழை நிலையை மடித்தவனாம் இறைவன் கழலைப் பிடித்தவனாம் (தமிழா)

4

கலத்திற் கிழக்கே சென்றவனாம் கடுகிச் சாலியைக் கொண்டவனாம் கரையில் அடியைக் கண்டவனாம் கடலை முழுதும் வென்றவனாம்(தமிழா)

5

தூங்கெயில் மூன்றும் எடுத்தவனாம் துன்ப மழையைத் தடுத்தவனாம் ஓங்கெயிற் பொறிகள் தொடுத்தவனாம் உயர்வான் கோபுரம்

அடுத்தவனாம் (தமிழா)

6

காந்தக் கோட்டை கட்டினனாம் கடல்போல் ஏரி வெட்டினனாம்

கங்கை வடக்கும் எட்டினனாம் கயிலைப் பனிமலை நட்டினனாம் (தமிழா)