இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
இசையரங்கு இன்னிசைக் கோவை
7. திருக்குறள் பொதுமறை
'திவ்ய தரிசனந் தரலாகாதா' என்ற மெட்டு
ப.
திருக்குறள் பொதுமறையெனத் திகழும் - தீந்தமிழேந்திய
43
(திருக்)
2. 1
தருக்கிய பொருள்கள் தாம்பல வேறாய்த்
தழங்குவர் அறுவகை மதத்தார்
ஒருக்க வெல்லாரும் உண்மையீ தென்றே
உடம்பட விளம்பிய திறத்தால்
(திருக்)
2
முத்திரு மேனிகள் அற்றொரு பொருளாய்
மூவுல கும்பல முறையும்
முத்தொழிற் படுத்தும் எத்தகை யிடத்தும்
முழுமுதற் கடவுளென் றறையும்
(திருக்)
3
பிறப்பினா லெவர்க்கும் பெருமையொன் றில்லை
பேசுறு குலம்செயுந் தொழிலே
சிறப்புறு மொழுக்கம் செல்வமாங் கல்வி
சிறுமையாம் இழுக்கம்இப் பொழிலே
4
தமிழ்நிலந் தனிலோர் தமிழ்மகன் மதியால்
தமிழிலே தோன்றினும் என்றும்
இமிழ்கட லுலகம் எவணும்மே லையர்தாம்
இலகுறு மதிமிசை சென்று
(திருக்)
(திருக்)