உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 35.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




இசையரங்கு இன்னிசைக் கோவை

5

அச்சமோ நாண்மடமோ அடிமை மூடநம்பிக்கை எச்சம்மா றன்பின்மையோ எழில்தமிழ்ப்பேர் தாங்காமை

6

சமயமொழி பேர்என்று சாற்றவொன் றில்லை

அமையுமொழி யிறைவன் அறியாத தில்லை

12. தமிழே தனித்தமிழ்

47

(தமிழிலே)

(தமிழிலே)

'சந்திரசூரியார் போங்கதி மாறினும்' என்ற மெட்டு

ப.

தமிழென ஒன்றும் தனித்தமிழ் என்றும் தானிரு மொழியில்லை தமிழது தானே தனித்தமி ழாகும் தவிர்ந்திடின் பிறசொல்லை

உரைப்பாட்டு

தனிப்பாலென்று சொல்வது தருபவர் பாலொடு தண்ணீர் கலந்த

தனித்தமிழென்று சொல்வதும் தமிழொடு பிறசொல்லைத்

பின்பே

தகவிலார் கலந்த பின்பே

ப.

கடன்கொள்ளு மொழிகளே கடுகி வளருமென்று கழறுவரே

சிறியார்

வடமொழிகளுக் கெல்லாம் வாழ்வருள் தமிழின்சொல் வளந்தனை

உரைப்பாட்டு

அவரறியார்.

பெருஞ்செல்வன் வேண்டாது பிறர்பாற் கடன்கொள்ளின் பெயரும்

பொருளுங் கெடுமே

பிறசொல்லை வேண்டாத தமிழுங் கடன்கொண்டு பெரிதுங்

கெட்டது திடமே.

தமிழைக் கெடுப்ப தொன்றே தம்பெரும் பணியெனத்

தாங்கியுள்ளார் சிலரே

அவரைத் தெரிந்துகொண்டு அகன்று விலகிநிற்க அருந்தமிழ்

ஆர்வலரே (தமிழென)