உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 35.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




இசையரங்கு இன்னிசைக் கோவை

ஆரியரே பெரும்பால் ஆசிரியன்மார் அங்கே

அமர்ந்திருந்தார் அத்தீங்கை அகற்றவே பல்துறையும்

சீரிய தமிழரே சிறந்த தலைவரெனச்

சேர்ந்து பணிசெய்யவே செய்தனர் நன்முறையே

3

பொன்னிற நெடுமெய்யும் இன்னழ கொண்முகமும் மன்னவர் குலமென எண்ண வுறுவனவே புன்னகை யொடுதிரு மண்நுதல் அணிசெய

மென்னடை நடந்துபோம் விண்ணவனோ எனவே

27. தமிழ்த்தொண்டர் படைச்செலவு ‘ராசன் வந்தனம்' என்ற மெட்டு

1

படையெடுக்கவே கடு நடைதொடுக்கவே

பாண்டியன் வளர்த்த கழகப் பாட்டுடைத்தமிழ் மறவரே

பாரெலாம் ஊரெலாம்

பண்டை முத்தமிழ் பரப்புவோம்

இடம்வலம் இடம்வலம்

இடம்வலம் இடம்வலம்

2

பரவைதன் னடிதொழப் பணித்த பாண்டியன்

பாங்கிலே வளர்ந்து பண்பில்ஓங்கு பாண்டி மறவரே

பரண்மனை அரண்மனை பைந்தமிழையே பரப்புவோம் இடம்வலம் இடம்வலம்

இடம்வலம் இடம்வலம்

59

(சேலங்)

(சேலங்)