உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 35.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




60

3

செந்தமிழ்க் காஞ்சி

தூங்கெயில் கொண்ட தொடித்தோள்நற் செம்பியன் தோன்றிவந்த குடியின் மானம் ஈண்டுசோழ மறவரே

தொழிலகம் பொழிலகம்

தூயதமிழைப் பரப்புவோம்

இடம்வலம் இடம்வலம்

இடம்வலம் இடம்வலம்

4

தென்குமரிமேல் வடபனி மலைவரை

சேரவே யோர்மொழி வைத்தாண்ட சேரலாதன் மறவரே

தெருவிலும் செருவிலும்

தீந்தமிழ்தனைப் பரப்புவோம்

இடம்வலம் இடம்வலம்

இடம்வலம் இடம்வலம்

5

வெள்ளங்கள் எனமிக விரியும் பஞிலமாய் வீறுகொண்ட ஏறுகள்போல் வேறுவேறு படைகளும் வெல்லுவோம் செல்லுவோம் வெண்ணிலவையுங் கொள்ளுவோம்

இடம்வலம் இடம்வலம்

இடம்வலம் இடம்வலம்

28. தமிழுக்கு நற்கால அண்மை

‘எந்தன் இடது தோளும்' என்ற மெட்டு

ப.

நல்ல காலந் தமிழை நண்ணி வருவதென

நான்செவி யுற்றேன் நல்ல சொல் சொல் சொல் இன்றே

(நல்ல)

து.ப.

பல்லவ புரங்கண்ட பாக்கத்து விரிச்சியும்

பாங்காயொத் திசைத்தது சில் சில் சில் என்றே

(நல்ல)