உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 35.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




62

பண்

-

'காப்பி'

30. தமிழ்வாழ்த்து

ப.

வாழிய வேங்கடந் தென்குமரி

செந்தமிழ்க் காஞ்சி

தாளம்

ஒற்றை

வைகிய ஆயிடைச் செந்தமிழே

வீழிய தீங்கான வேற்றுச்சொல் யாவுமே விண்ணோன் வழிபாடு தென்மொழி மேவுமே

வேறுபல் நூல்தமிழ் வீறுகவே

ஏழிசை நாடகம் எல்லாந் தமிழாக

இன்புறு முத்தமிழ் முன்போல் வழக்காக

இந்தியும் செல்லுக வந்தவழி

31. உலகத் தமிழ்க் கழகம் 'தெண்டனிட்டேன் அடியேன்' என்ற மெட்டு

ப.

உலகத் தமிழ்க் கழகம் - உயர்ந்தொழுகும்

து. ப.

பலகற் றுயர்ந்துதனிப் பைந்தமிழ்ச் செல்வங்கண்ட

(வாழிய)

அலகற்ற மறைமலை அடிகளைத்தன் மேற்கொண்ட

(உலகத்)

குலமுத் தமிழைக் கொல்லுங் கொண்டான்மா ரோடுகூடிக் கோலாலம்பூர் சென்னையிற் குடவரும் வடவரும்

பலகுற்றமாய்த் தமிழைப் பழித்த விருளகற்றப்

பகலவனெனத் தோன்றிப் பல்கதி ரோடுவரும்

(உலகத்)