உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 35.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




1ஆம் பாடம்

கடவுள் வணக்கம்

வாசுதேவனே வந்தாளும் மைந்தனை' என்ற மெட்டு

1.

தேவனே உன்னைத் தேடி வந்தோமே காவ லாகவே கருணை செய்குவாய்.

2. சாமி நாதனே சாற்றினேன் உன்னை தீமை யாவையும் தீர்ப்பாய் இன்னுமே.

3. என்றன் நாடெல்லாம் இறைவனே உன்னை என்றும் ஏத்திய இசைந்து வாழச்செய்.

4. அன்னை தந்தைநீ அண்ணன் தம்பிநீ முன்னும் பின்னும்நீ மூவா மருந்துநீ.

5. அழியும் பொருள்களை அகற்றி யுன்னைநாம் செழிய பொருளெனத் தேடச் செய்குவாய். 6. கலகம் நீங்கியோர் கட்டா யிருக்கவே

உலகம் யாவையும் ஒருமைப் படுத்துவாய்.

7. அறிவில் லாமையை அகற்றி எங்கட்கு

அறிவை ஆக்கியே அரவ ணைத்திடாய்.