உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 35.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




72

2ஆம் பாடம்

இராஜ வாழ்த்துப் பாடல்

செந்தமிழ்க் காஞ்சி

'வாசுதேவனே' என்ற மெட்டு. பின்னடி முடுக்கு 1. வாழ்க வாழ்கவே வாழ்க வாழ்கவே

ஆழி குழும் அவனி ஆளும் அரசன் வாழ்கவே.

2. மாத மாதமாய் மாரி வாழ்கவே

சாதிகளைச் சரிப்படுத்தும் சதுரன் வாழ்கவே.

3. வேதம் வாழ்கவே வேள்வி வாழ்கவே

நீதியாவும் நிலைநிறுத்தும் நிருபன் வாழ்கவே.

4. மறையோர் வாழ்கவே மணங்கள் வாழ்கவே குறைகள் யாவும் நீக்கும் ஜார்ஜு கோமான் வாழ்கவே.

5. போகம் வாழ்கவே புண்யம் வாழ்கவே

ஏக மாக ஆளும் ஜார்ஜு இறைவன் வாழ்கவே.

6. தர்மம் வாழ்கவே தனமும் வாழ்கவே

ஜெர்மன் சண்டை யில்ஜெயித்த சேயன் வாழ்கவே.

7. தந்தை தாயைப்போல் தாமே முதல்முதல் இந்தியாவில் பட்டம் பெற்ற இருவர் வாழ்கவே.

8. வாழ்க வாழ்கவே வையம் வாழ்கவே

ஊழி ஊழி ஐந்தாம் ஜார்ஜு உரகன் வாழ்கவே!