உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 35.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




சிறுவர் பாடல் திரட்டு

75

5ஆம் பாடம்

கடல் பாட்டு

இதற்குக் குறிப்பிட்ட மெட்டு இல்லை. இசைந்தபடி பாடலாம்.

1. ஓ! ஓ! கடலே!

ஒலித்த கடலே!

வா! வா! கடலே!

வளைத்த கடலே!

2.

அலைகள் பெரிய

மலைபோல் முந்தி

பலமாய் வந்து

பாய்கிற கடலே!

3. சோப்பை நீரில்

தோய்த்தது யாரே?

தாக்கிய நுரைகள் தங்கிய கடலே!

4.

நல்ல வானில்

நட்சத் திரம்போல்

உள்ளே மீனை

ஒளித்த கடலே!

5. வானம் போல

வண்ணக் கடலே!

கூனி யிருக்கும் குளிர்ந்த கடலே!

6. உப்புக் கடுக்கும்

உவர்த்த கடலே!

சிப்பி ஒதுக்கும் சிறந்த கடலே!

7. அமைதி யாகு

அலைந்த கடலே!

எமதுமணல் வீட்டில் ஏறாதே! கடலே!