இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
சிறுவர் பாடல் திரட்டு
1.
2.
3.
10ஆம் பாடம்
குழந்தையைக் குளிப்பாட்டல்
இது தாய் சொல்வது குறிப்பிட்ட மெட்டு இல்லை.
குழந்தையே வாஇங்கே – உன்னைக்
குளிப்பாட்டப் போகிறேனே
அழுகாதே அழுகாதே - உன்னை
அடித்திடுவேன் பார்இப்போ
கைகாலை ஆட்டாதே - உன் ஐயாவைக் கூப்பிடுவேன்
4. குளிராது குளிராது - நீ
கொஞ்சநேரம் பொறுத்துக்கொள்ளேன்
5.
முதுகைக் குனிஇப்போ - நான்
மெதுவாகத் தேய்க்கிறேன் பார்
6.
சோப்புப் போட்டு உடம்பை – சுகமாகத் தேய்க்கிறேனே
நான்
7. கண்ணே கண்ணை மூடு - உன் கண்ணெல்லாம் காந்திவிடும்
8. இன்னும் தலைமேலே
நான்
இரண்டு செம்பு ஊற்றுகிறேன்
9. இப்போ எழுந்துவாடா
-
உன்
ஈரத்தை துடைக்கவேணும்
10. வெளுத்த கமுசுடுத்து - உனக்கு வெகுநேர்த்தி யாயிருக்கும்.
81