உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 35.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




84

செந்தமிழ்க் காஞ்சி

1.

2.

13ஆம் பாடம்

பிச்சைக்காரன்

பிச்சைக்காரா! பிச்சைக்காரா! பெரும்பசியோ? உன்தனுக்கு இச்சிக்கும் உணவுகளை என்னிடம்சொல், இட்டிடுவேன்.

பேசக்கூட முடியவில்லை பெரிதும் தொண்டை கட்டினதோ? நேசத்துடன் மருந்திடுவார் நினைக்கில்லையா?

என்செய்வேன்

3. மூடஒரு துணியின்றி முன்பனியில் இரவிலே நீ நீடுவேளை நிலாவெளியில் நிற்கிறாயே! பாவம்! பாவம்!

4. நில்லாதே, கால்நோகும் நினக்கு ஒன்றும் பலமில்லை எல்லாம்என் அன்னையிடம் எடுத்துச்சொல்வேன் இங்கு

14ஆம் பாடம் கழுதைப் பாட்டு

உட்கார்

‘உந்தனைச் சும்மாவிடுவேனோ' என்ற மெட்டு - இங்கே வார்த்தைக்கு இசைந்தபடி நிறுத்திப் பாடவேண்டும்.

1. கழுதை! கழுதை! இப்போதே அழுதே அழுதே கத்தாதே.

2. காலைத் தட்டி நடக்கிறாயே பாலைக் குட்டி குடிக்கிறதே

3. மூக்குங் கரிபோல் கருப்பாகும் காக்கை முதுகில் இருப்பாகும்.

4. எட்டி எட்டி வாராதே

கட்டி எடுத்துப் போடுவேன்

5. கொழுக்கப் புல்லைத் தின்பாயே அழுக்குச் சுமையைச் சுமப்பாயே