உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 35.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




88

18ஆம் பாடம் வாழைமரப் பாட்டு

செந்தமிழ்க் காஞ்சி

'கத்தரிக்காய் கொண்டுவா' என்ற மெட்டு

வாழையைப் பார் தோழா வாழையைப் பார் தோழா.

-

ப.

வகையுடனே

1. கீழேயிருந்து பக்கம்

கிளைத்துள்ள கன்றுகளே

தாயொடு பிள்ளைகள்போல் - தழைத்திருக்கும்

(வாழை)

2. வழுக்கை மரத்தின் மேலே

பழுத்த பழத்தைப் பாராய்

கிளிப்பிள்ளை கொத்தித் தின்று - கீழே விழுந்தும்

(வாழை)

3. உலர்ந்த தண்டை இதோ பார்

ஒடுங்கின தீரமில்லை

கிழமையில் நம்மழகும் - கெடுமிவ்வாறே

(வாழை)

4. கனிய பழத்தைத் தின்றால்

இனிமையாய் இருக்குதே

இனிமேலே நாம் பிறர்க்கே

இனியசெய்வோம்

(வாழை)

5. உறுப்புகள் யாவும் நன்றாய்

உதவிடும் வாழையைப் பார்

ஒருப்பட எல்லார்க்கும் - உதவுவோம் நாம்

(வாழை)

6. கோழிதன் குஞ்சுகளைக்

கூட்டி யணைப்பதுபோல்

வாழைப்பூப் பிஞ்சுகளை - மறைப்பதைப் பார்

(வாழை)