உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 35.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




சிறுவர் பாடல் திரட்டு

1.

17ஆம் பாடம்

சிட்டுக்குருவிப் பாட்டு

'சித்தாதி சித்தர்கள்' என்ற மெட்டு

சிட்டுக் குருவி முகட்டில் சிறுகூடு

கட்டி யிருக்குது பார் – அதில் இரண்டு முட்டை இருந்தன பார்.

2.

முட்டை வெடித்தது குஞ்சு பொரித்தது

எட்டி எட்டிப் பார்க்குதே - இரண்டு கண்ணும் தட்டித் தட்டிப் பார்க்குதே.

3. இன்னும் உரோமந்தான் ஒன்றும் இல்லை நன்றாய்க்

4.

5.

கண்ணும் தெரியவில்லை

இன்னும் சிலநாள் செல்லும்.

அது தெரிய

தாய்க்குருவி தூரம்போய்த் தான்இரை தேடி

வாய்க்குள்ளே வைத்துக்கொண்டு – வந்து குஞ்சுக்கு வாய்க்குள்ளே வைக்குது பார்.

அந்தப் பக்கத்திலே தந்தைக் குருவியும்

குந்தி யிருக்கிறது - இதை நமது தந்தைக்குச் சொல்வோம் வாரும்.

87