உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 36.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

116

இசைத்தமிழ்க் கலம்பகம்

133. ஏமாறுந் தமிழன்

'மாயப்பிர பஞ்சத்தில்' என்ற மெட்டு

1

தமிழன்போல் ஏமாறிதான் இங்குவே றில்லை தன்மானம் இழந்துபின் தவிப்பானும் வேறில்லை இருண்ட நாடுகளும் முன்னேறிய காலம்

இரசியர் அமெரிக்கர் பரவெளிக் கோலம் இன்னும் கையாலே பஞ்சின் இழையதை நூற்று இந்திக் கட்டாயக்கல்வி இருகையால் ஏற்றுத் தாய்மொழி யாம்தமிழ் தாழ்ந்து கெடும் தறுவாயும் அயல்வட மொழியினில் வழிபடும்

2

-

அந்தத்

வெண்ணிற வடவரின் வெடிப்பொலி கண்டு

விண்ணவர் மொழியென்று விரும்பியே கொண்டு முன்னாளில் மடமையால் மூவேந்தர் வணங்கினும் இந்நாளி லும்அதை ஏற்பது நன்றோ

திண்ண மாய்அது தமிழ்த்திரிபு கண்டீர் இந்த

(தமிழன்)

உண்மையை உணர்ந்தபின் உளந்திருந்துவீர் இன்றே (தமிழன்)

134. தமிழன் அடிமைத்தனம்

இது அதிசயமே' என்ற மெட்டு

ப.

இது வியப்பதொன்றே இன்னும் விளங்காததே - பர வெளிபுகுங் காலத்திலும் பகல்

விழிகுருடெனவுள தமிழன் நிலை.

நயத்தகு தமிழ்மத நாகரிகம்

உ.1

நானில முதலென நன்கறிந்தும்

மயக்கமுடன் அரைச்செயற்கை யாகும் அயல்

வடமொழி வழிபட வழங்குவதே.

(இது)