உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 36.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஞா. தேவநேயப் பாவாணர்

(உரைப்பாட்டு)

இருந்த நாளெல்லாம் எரிவாயிருந் தெல்லையிலாத் துன்புற்றே இறந்தபின் அமைதியுற் றிருக்கும் நிலையே

பொருந்தாத முறையில் ஒளிப்படங்கட்குப் பூச்சாத்தி வணங்குதல் புண்படுத்துவதன்றி ஒரு பயன் இலையே.

(6T GOT)

145. அத்திலீபின் ஆராயாச் செயல்

(இசைந்த மெட்டிற் பாடுக)

ப.

அத்திலீப் பெருமகன் ஆட்சி

அத்திலா மரபறு மாட்சி.

து. ப.

125

மெத்திய அரசியல் சூழ்ச்சி

மெத்தவும் இருதலை வீழ்ச்சி

(அத்திலீப்)

உ.1

இந்தியா இருதுண் டாக இன்னலும் எல்லை போகப்

பிந்தியும் அமைதி ஏகப்

பிணங்கிய நிலையிற் சாக.

(அத்திலீப்)

2

சிறிதும் பொறுப்பில் லாது சிக்கல் களைத்தீர்க் காது

வறிதே வடவர் மீது

வைத்தார் நாவலம் தீது

எளிதாய்ப் பேர்பெற எண்ணி ஈந்தார் விடுதலை அண்ணி

(அத்திலீப்)

3

வலிதாய்க் கூடப் பண்ணி

வகுத்தார் வழிவழி கண்ணி.

(அத்திலீப்)

அத்து – வழி, பொருத்தம். மரபுறு மரபறுத்த