உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 36.pdf/176

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

146

இசைத்தமிழ்க் கலம்பகம்

2

இந்நாட்டிற் கேயிந்தி இறையேனும் ஏற்காது

இதனாலே தமிழ்பின்னே இடருண்டு கெடுமென்றே சொன்னாலும் அலுவல்போம் சோராதீர் வாயென்றே இந்நாள்மந் திரிமாரே எச்சரித் திருக்கின்றார்.

3

இந்திக்கே தமிழ்நாட்டில் எதிர்ப்பில்லை திராவிட முன்னேற்றக் கழகந்தான் முரண்பட்ட எதிர்ப்பென்றே இன்றைக்கும் பேராய மந்திரி மார்சொல்வார் எவ்வாறு புலவர்தாம் எதிர்ப்பார்வாய்ப் பூட்டோடே.

173. இந்திக்குப் பொதுமொழித் தகுதியின்மை

‘வரமுலோசகிப்ரோ சுடனீ' என்ற மெட்டு

ப.

பொதுமொழி யெனவுந் தகுமோ

பொதியம்வரையும் இந்தியப்

(பொது)

து. ப.

புதுமொழியாய் அறிவியலிற் பொருள்நூல் ஏதும் இல்லா இந்தி

(பொது)

முதுசெந்தமிழும் ஈங்கிருக்க முறையில்லாது சிறிய மொழியை முகந்தது பேசுவார் தொகையை அளவை கொண்ட கேடதுவே. கதுமென விந்தி வளர்ந்திடவே கரையில்லாது வடசொல்லையே கடன்கொண் டின்று புனைகின்றார் சொல்

கடைவாய்ப்பல்லும் உடைந்துபோக.

(பொது)