உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 36.pdf/175

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஞா. தேவநேயப் பாவாணர்

2

உலகமுள்ள அளவும் இங்கே ஒருகட்சியின் ஆட்சியே நிலைநிறுத்தப் பலகொடுமை நிகழ்த்துவது மாட்சியோ.

3

சிறுபதவி விட்டுவிட்டுப் பெரும்பதவி தாங்குதல் சிறந்ததோதன் னலவிழப்போ செப்பும்உண்மை ஓங்கவே

4

ஆங்கிலத்தை ஆட்சிமொழி யாக்கி யிந்தி நீக்குக அணிகலப்பொன் தூயதாக்கி அதிக வரியை மாற்றுக.

5

இந்தியாலே தமிழ்கெடுதல் இலங்கும் அங்கை நெல்லியே மந்திரியாம் பதவிநோக்கி மக்கள் தாயைக் கொல்வதோ!

6

பணத்தினாலும் பதவியாலும் பற்றுங்குலத்தி னாலுமே இணக்கியெல் லாத்தமிழரையும் என்றும் ஏய்க்க ஏலுமோ?

7

நேர்மையுடன் பொதுநலத்தை நேர்ந்தேயரசு செய்பவர் தேர்தலுக்கு முன்பதவி தீர்த்து முயற்சி செய்கவே

8

குடியரசின் பெயரைக்கொண்டு கொடுங்கோ லாட்சி செய்பவர் அடியோடழியு மாறிறைவன் அருளும் நிறையப் பெய்யுமே!

172. தமிழ்ப் புலவர் வாய்ப்பூட்டு

1

மொழியென்னும் துறையாளும் அதிகாரி புலவோனே முடையின்றி மனைவாழ்வு நடையாக வுரியோனே இழிவுண்டு பழிமேலும் அழிவேதன் மொழிக்காயின் எதிர்நின்று போராடி ஈடேற்றக் கடவோனே.

145