உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 36.pdf/174

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

144

3

உரிமையெல்லாம் இழந்தால் – பின்

உலக வாழ்க்கையும் எதற்கே உரிமை யென்றே அடிமைத் தனத்தை உரைத்தால் உரிமை யாகாது இருமொழியாம் கொள்கையிங்கே

என்றும் நிலவுகவே

இருமொழியும் தேர்ச்சி பெற்றால்

எங்கும் அதுபோதும்.

இசைத்தமிழ்க் கலம்பகம்

(இருப்ப)

170. தமிழ்நாட்டு மந்திரிமார் தமிழைக் காட்டிக் கொடுத்தல்

உங்கள் பொன்னான கைகள்' என்ற மெட்டு

இரு கண்ணான தமிழை மண்ணாளப் பெறினும் காட்டிக் கொடுக்க லாமா

எண்ணமும் வருமோ எவ்வாறு தானோ

விண்ணோரும் விரும்பும் பண்ணாருந் தமிழைக்

கல்லாத பெயரேநீர்

தாயாம் செந்தமிழே நோயாம் இந்தியினால்

மாயாதென் றுளறுகின்றீர்

கீழான அடிமைக் காளாகும் மந்திரி

வாழ்வும் ஒருவாழ்வோ - தமிழ்

நாடு பாழ்படக் கேடு சூழ்கிறீர்

ஈதோ விடுதலைதான்

(இரு)

171. காமராசர் திட்டம்

'தேரத்திலே தில்குசத்தா' என்ற மெட்டு வகை

1

தலையணையைத் திருப்பிப் போட்டால் தலைவலிதான் தீருமா? தலைமையில்லார் பதவி மாறின் தாறுமாறு மாறுமா?