உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 36.pdf/180

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

150

இசைத்தமிழ்க் கலம்பகம்

177. சொல்லொன்று செயலொன்று சின்னப்பாப்பா எங்கள் செல்லப்பாப்பா' என்ற மெட்டு

ப.

சொல்வதொன்று - அவர்

செய்வதொன்று

து. ப.

எல்லவர்க்கும் தொல்லையொன்றும் இல்லையென்று (சொல்)

உ. 1

வெள்ளையர்முன் ஆண்டகாலம் வேற்று மொழியையே

விழுமிதாக வளர்த்ததாலே வீழ்ந்த நம்மொழி

நல்லகாலம் வந்ததின்று நறுந்தமிழ்க் கென்றே

நஞ்சமாக இந்தியையிந் நாட்டிற் புகுத்தினார்

(சொல்)

2

ஆட்சிமொழியும் அறிவுமொழியும் அருமைத் தாய்மொழி ஆகவேண்டும் என்றுபறையும் அறைந்து கூறுவார் மாட்சியாகும் ஆங்கிலச்சொல் மாற்றி னாற்பொது மக்களுக்கு விளங்காதென்று மறுத்தும் ஆளுவார்

(சொல்)

3

இந்தியிங்கு வந்திடின்நம் இன்றமிழ் கெடும்

என்றுநாடி மறைமலைதாம் நன்றுமுன் சொன்னார் இன்றுசெந் தமிழ்கல்லாத மந்திரி மாரே

இந்தியால் தமிழ்கெடாதே என்று சொல்கின்றார்

(சொல்)

178. தமிழகத்தில் இந்தியைப் புகுத்த அமைச்சருக்

கதிகாரமின்மை

பண்

(சிம்மேந்திரமத்திமம்)

ப.

இந்தியைப் புகுத்திட மந்திரிமார் களுக்கே

எந்த வதிகார முண்டிந்நாடே.

தாளம் - முன்னை