உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 36.pdf/187

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஞா. தேவநேயப் பாவாணர்

2

மறைமலை யடிகளின் உரைவழி படியும்

மாண்புறு தமிழன்எப் படியும்

இறைபெறா அவையில் ஏதிலர் முடிபும்

எம்மவர் கொள எங்ஙன் முடியும்

3

பொன்னுடன் இரும்பெதும் பொருந்துவ தில்லை

பொருந்துமோ வடமுந்தென் எல்லை

தென்னில மருங்கில் தெளிதமிழ் முல்லை

திருந்திடா மொழிவரல் தொல்லை.

4

நெருப்பையே அணைத்திட நெய்யிடார் நிலமே

திகழ்வதால் தெளிந்திடல் புலமே

இருக்கும் ஒற்றுமையும் ஈந்ததாங் கிலமே

இனிஇந் திவரின் அதும் இலமே

186. இருமொழிக் கொள்கை

சுகுணமுலே செப்பு கொம்டி' என்ற மெட்டு

பண்

(சக்கரவாகம்)

இருமொழிக் கொள்கையே நன்று

இன்றமிழ் நிலமென்றும்

து. ப.

ஒருவழியும் தமிழருக்கே

உதவாக்கடை இந்தியன்றோ

ஆங்கிலத்தை அகற்றி இந்தி

அதனிடத்தில் அமைக்க நின்றார்

தாம்பதவி நீடிக்கவே

தன்னலமாய் மந்திரிமார்

(இந்தி)

(இந்தி)

(இந்தி)

157

தாளம் - ஈரொற்று

(இரு)

(இரு)

(இரு)