உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 36.pdf/203

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஞா. தேவநேயப் பாவாணர்

204. இந்திப்போருக் கழைப்பு

(இசைந்த மெட்டிற் பாடுக)

1

தண்டமிழ்த்தாய் தன்னைக் காக்க வா வா வா

தமிழனென்று தன்னைச் சொல்வோன் வா வா வா தண்டெடுத்து மண்டு போர்க்கு வா வா வா தன்னலமில் லாமல் இன்னே வா வா வா

2

ஆண்மை யென்னும் பான்மை யுள்ளோன் வா வா வா

ஐயீ ராட்டைப் பையனேனும் வா வா வா

நாண்மை யுள்ள தாயே இன்று வா வா வா

நன்மகற்கு வன்மை யூட்ட வா வா வா

3

மான முள்ள ஆசிரியன் வா வா வா மறமிகுந்த மாண வன்நீ வா வா வா ஏன மேந்தி இரக்கின் றோனும் வா வா வா இந்தியைத் துரத்த இன்றே வா வா வா

கலித்துறை

கலையி ழந்தனம் கழகநூ லிழந்தனம் கடமா மலையி ழந்தனம் மானமி ழந்தனம் செல்வ நிலையி ழந்தனம் நீணில மிழந்தனம் இனியே தலையி ழக்கினும் தமிழையி ழக்கிலம் தகவே.

205. மாணவரே தமிழ் காக்கும் மறவர் 'பரமண்டலங்களில் வசிக்கும் எங்கள்' என்ற மெட்டு

1

மாணவரே தமிழ் மறவர் படை மற்றோர் யாவரும் மறந்தக்கடை காணவே வெற்றி கரந்தையிடை

கைதர இந்திக்குக் கடுகிவிடை

(மாண)

173