உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 36.pdf/206

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

176

இசைத்தமிழ்க் கலம்பகம்

தொழிலகம் பொழிலகம்

தூய தமிழைப் பரப்புவோம்

இடம் வலம் இடம் வலம்

இடம் வலம் இடம் வலம்

4

தென் குமரிமேல் வடபனி மலைவரை

சேரவே யோர்மொழி வைத்தாண்ட சேரலாதன் மறவரே

தெருவிலும் மருவிலும்

தீந்தமிழ் தனைப் பரப்புவோம்

இடம் வலம் இடம் வலம்

இடம் வலம் இடம் வலம்

5

வெள்ளங்கள் எனமிக விரியும் பஞிலமாய்

வீறு கொண்ட ஏறுகள்போல் வேறுவேறு படைகளும் வெல்லுவோம் செல்லு வோம் வெண்ணிலவையுங் கொள்ளுவோம்

இடம் வலம் இடம் வலம்

இடம் வலம் இடம் வலம்

208. இந்திப் போருக்கு ஏவல்

(இசைந்த மெட்டிற் பாடுக.)

1

செந்த மிழ்நி லம்பு குந்து சிந்து கின்ற இந்தியை இந்த நாள்நெ ருங்கிமுந்தி இங்கு நின்றும் உந்துவீர் கொந்த ழல்வி ரிந்த குண்டெ னுந்த டைகள் வந்திடின் கந்து போலொ ருங்கு நின்று கன்றி யேவி லங்குவீர்

2

சட்ட மன்றத் தேர்தல் நேரும் சமையம் நாட்டி லெங்கணும் பட்டி தொட்டி பாடி குப்பம் பட்டி னங்கள் நகரெலாம் சுற்றி வந்து சந்து பொந்து சிற்றில் மாளி கைகளும் உற்ற வர்நம் செந்த மிழ்க்கே ஓலை போடச் செய்குவீர்