உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 36.pdf/219

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஞா. தேவநேயப் பாவாணர்

ஆளுகின்ற கட்சிக்கிதில் அக்கறை யில்லை

ஆசிரியர்க்கும் தமிழில் ஆற்றலே யில்லை

வேலைதரும் சொல்லைநிறை வேற்றவும் இல்லை

விரும்பித்தமிழ் கற்பதற்கும் உதவியும் இல்லை

(தமிழக)

226. தமிழ்வாயிற் கல்வி பயன்படாமை 'பாடிப்பாடி உன் பாதத்தைக் காணேனே' என்ற மெட்டு

ப.

பைந்தமிழிற் பயின்றாலோர் பயனில்லையே - மிகப்

பாடுபட்டுந் தொல்லையே - தமிழா!

உ.1

பற்றினாற் பயிலவும் படிப்புதவி யில்லை

பட்டம் பெற்றாலும் பின் பதவியில்லை

2

ஏனைக் கல்லூரியெலாம் இருப்பதொன்றாங்கிலம் இரண்டொன்றில் வகுப்பேநம் இன்றமிழ்க்காம்.

3

தமிழ்வாயில் கல்லூரிகள் தாமெல்லாம் தாங்கும் வரை அமைவுறும் கலைவாயில் ஆங்கிலமே.

(பைந்)

(பைந்)

(பைந்)

227. சட்டத்தைத் திருத்துதல்

பண் சிந்துபைரவி

1

189

தாளம்

இணையொற்று

சட்டமிருப்பது மக்களுக் கென்றே

மக்க ளிருப்பது சட்டத்திற் கன்றே

சட்டையைத் தைப்பது சடலத்திற் கன்றோ

சடலத்தைச் சட்டைக்குத் தகவைத்தல் நன்றோ.