உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 36.pdf/233

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஞா. தேவநேயப் பாவாணர்

244. பல்வேறு தகுதியில்லார்

(இசைந்த மெட்டிற் பாடுக)

ப.

இதென்ன கெட்ட வழக்கம் இனியேனும் அதை விலக்கும்

து. ப.

மடமையான ஒழுக்கம்

203

வழமை யேனும் இழுக்கம்

(இதென்ன)

உ.1

வடமொழிமிக வேட்பார்

வரஇந்திதனை ஏற்பார்

மடம்தமிழதிற் சீர்ப்பார்

மறைமலைபுகழ் ஆர்ப்பார்.

(இதென்ன)

2

கட்சித்தலைவர் கருத்தே

காணும் நூலிற் பெருத்தே வெற்றுச் செல்வர் வரத்தே

விழவில் தலைமைக் குரித்தே

(இதென்ன)

3

ஆசிரியரே யல்லார்

அமைச்சர் கல்விக்குள்ளார்

மாசு கூறவே வல்லார்

மருவுந் தமிழ்ப் பற்றில்லார்

(இதென்ன)

4

மருத்துவத் துறையுலகும்

வழக்குத் தீர்க்கும் உலகும் திருத்து பல்கலைக் கழகம்

திகழ் தலைமையாய்ப் பழகும்

(இதென்ன)