உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 36.pdf/237

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஞா. தேவநேயப் பாவாணர்

248. தமிழர் என்போரெல்லாம் தமிழராகார்

'கல்லிலே கலைவண்ணங் கண்டான்' என்ற மெட்டு

ப.

தமிழர் என்றிருப்போர் எல்லாரும்

நல்ல

தமிழன்பரோ நெஞ்சைத் தடவியே பாரும்.

து. ப.

தமிழர் என்றில்லாத பேரும் - நல்ல

தமிழுக்குத் தொண்டுசெய்துள்ளாரே தேரும்.

(தமிழர்)

உ.1

நக்கீரன் திருவாத வூரன் நல்ல

நாவல்ல பரிதிமாற் கலைஞன் என் பேரன்

தக்காங்குத் தமிழதி காரன் - ஆன

சாமிநாதை யன்பார்ப் பாவாரோ தேரின்.

(தமிழர்)

2

பாவேந்தன் வீரமா முனிவன் - தமிழ்ப்

பன்னூல் மொழிபெயர்ப் பாளன்போப் பினியன்

தாவியாராய் கால்டு வேலும் – நாமே

தலைமேற் கொள்ளுந் தமிழாளர்எக் காலும்.

(தமிழர்)

3

கொண்டான் புத்தமித்தி ரன்தான் - தமிழ் கொத்திய தேசிகன் சாமிநா தன்காண்

தண்டா வையாபுரி யென்பான்

இவர்

தவறிக் கனாவிலும் தமிழர்ஆ கார்தான்.

(தமிழர்)

207