இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
210
இசைத்தமிழ்க் கலம்பகம்
251. ஆரியர் தமிழர் ஒற்றுமை
'வள்ளிக் கணவன் பேரை' என்ற மெட்டு
1
ஆரியர் தமிழரே வேறு பாடெதுமின்றி
ஓரிய லாகவேண்டும் - நல்ல தங்கமே ஒருமித்து வாழவேண்டும்.
2
தமிழரும் ஆரியரும் சமநிலை யுணர்வோடு தமிழையே தாங்கவேண்டும் நல்ல தங்கமே தமிழகம் ஓங்கவேண்டும்.
3
―
இந்திய வரலாறு முந்திய நிலைகூறத்
தென்றிசை சேர வேண்டும்
திரிதலுந் தீரவேண்டும்.
4
―
நல்ல தங்கமே
நினைவு வலிமையெல்லா வினைகளுக்குமே யொன்றாய்
முனையுந் திறமேயன்று
―
நல்ல தங்கமே
முதன்மையாய்ப் பிறவுமுண்டு.
5
நலனாக வாழ்வதற்குக் குலவகை தீருமட்டும்
நிலையிதே நிற்கவேண்டும்
நல்ல தங்கமே
நேர்மையுங் கற்கவேண்டும்.