உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 36.pdf/239

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஞா. தேவநேயப் பாவாணர்

250. பிராமணர் தமிழன்பராகித்

தமிழ்நாட்டை வழிவழி யாள்க

209

இந்து நேச வங்க தேச பந்துவை யிழந்தனம்' என்ற மெட்டு வகை

பண்

சிந்துபைரவி

1

எந்த வூருஞ் சொந்த வூரே

எவரும் உலகில் உறவினர்

என்ற கொள்கை யினியர் தமிழர்

ஏற்க வேபி ராமணர்.

2

வந்த நாட்டின் வழமை கொள்ளல்

வந்த வர்தம் கடமையே

செந்த மிழ்பி ராம ணர்க்கும்

சொந்த அன்னை நன்மொழி.

3

வழக்கில் இல்லா வடமொ ழிக்கு வருமோ தெய்வத் தன்மையே வழக்கில் திரிந்த தமிழே பின்னர் மாறி யுள்ள தாரியம்.

4

வீட்டி லும்பி ராம ணர்தாம்

போற்றும் பூசை தமிழிலே

ஆற்றின் என்றும் ஆளும் வினையே சாற்றில் நூறும் ஏற்கவே.

5

முந்து நாள்பி ராம ணர்தாம்

மொழிந்தார் இருபொய் நாட்டிலே

இந்த நாளும் ஏமாற் றங்கள்

ஏற்கு மோநன் றெண்ணுவீர்.

தாளம் – ஈரொற்று