உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 36.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

xxiv

இசைத்தமிழ் கலம்பகம்

பாயிரம்

மறைமலை யடிகளும் மாமதி யழகரும் கறையுறும் இந்தியைக் கடிந்தும் தொண்டர்பின் சிறையுழந் தின்னுயிர் சிந்தியும் வடவர்தாம் இறையுமெ ணாதிவண் இந்தியைப் புகுத்தினர். இந்நில வரலாறும் இன்றமிழ்ப் பெருமையும் என்றுமே யறியாமல் இறைமை தாங்கிய தன்னல வடிவெனுந் தமிழப் போலியர் கன்னலந் தமிழையுங் காட்டிக் கொடுத்தனர். தமிழ லாதுயிர் தமிழனுக் கின்மையால் தமிழன் தன்னிலம் தன்னுயிர் தாங்கவே இமையுந் தாழ்விலா தியன்ற யாவையும் அமையச் செய்குவிர் அயன்மொழி யொழியவே. தன்மை யிழந்து தவிக்கின்ற தமிழன்தன் முன்மை யுணர்ந்து முன்னேறிச் சென்றிட உண்மை வடிவெனும் ஒருவன் உணர்த்தவும் இன்னி திசைத்தேன் இசைத்தமிழ்க் கலம்பகம். குறையும் எழுத்தினாற் கூடுவ தினிமையே அறையும் அளபெடை யாக்கியே யெழுத்தொலி நிறையும் அளவுற நீட்டுக இதற்கேயிம் முறையும் சிலவிடம் முதன்மையாய் ஆண்டுளேன். பாடற்குழாம் ஒன்றேற் படுத்துக வூர்தொறும் கூடற் குரியவாய்க் குறித்திட்ட நாள்களில் தேடற் கரியதாம் தீந்தமிழ் தெருவெலாம் பாடிப் பராவுக பயிற்சியைப் பெற்றபின். இந்தி யொழிந்தபின் இருமொழிக் கொள்கையே செந்தமிழ் நாட்டிலே சீராக வேரூன்றி

வந்தவ ருந்தமிழ் வாணரும் வாழ்ந்திட

முந்திய இறைவனும் முழுமையும் அருளவே.