உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 36.pdf/270

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

240

இசைத்தமிழ்க் கலம்பகம்

291. செந்தமிழ் அரண் அதன் செம்மையே

பண்

பூரிகலியாணி

ப.

செந்தமிழைக் காத்தது செம்மையென்னும் வரம்பே

து. ப.

முந்தே பாண்டியரும் மூடநம்பிக் கையால் பிந்திய காலம் பேணாது விட்டபின்பே

தாளம் - முன்னை

(செந்)

தந்தைதாய் மனையொடு தம்மை விற்குங் கயவர் தமிழ்ப்பெரும் பதவிகள் தாங்கி யுள்ளனர் இன்றே இந்தநாள் கலவையாய் இயங்கும் மொழியே தமிழ் என்றதன் அரணை எறிவர் பண்டைய தென்றே (செந்)

292. தமிழின் செம்மையும் தூய்மையும்

'என் உயிர் தவப்பயன் அம்மையே அப்பா' என்ற மெட்டு உரைப்பாட்டு

செந்தமிழ்ச் சிறப்பியல் செம்மைசேர் தூய்மை

சீரியவுலக மொழிகளுள்

முந்திய தமிழுயிர் செம்மைசேர் தூய்மை

முக்கழ கங்களால் மும்மை

நந்திய தென்றமிழ்ச் செம்மைசேர் தூய்மை நாகர மொழியால் நைந்தே வந்துள திந்தியால் உள்ளதும் நீங்கின்

வையகமே தமிழ் இல்லை.

ப.

எந்து செய்தாயினும் இன்னுயிர்த் தமிழை

இன்னே காப்பேன்நான் என்மொழியை இன்னே காப்பேன்

நான்.