உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 36.pdf/271

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஞா. தேவநேயப் பாவாணர்

293. தமிழைக் கெடுக்கும் இருமொழிகள்

'சாலையிலே இரண்டுமரம்' என்ற மெட்டு வகை

ப-

இந்தியாவில் இரண்டு மொழி எந்தமிழைக் கொல்லும் மொழி முந்தி வந்த வடமொழியோ டின்று வரும் இந்தி மொழி.

உ. 1

செந்தமிழில் வழிபடுக சிவன் திருமால் தமிழ்த் தெய்வம் செயற்கையான வடமொழியே சென்றுவிட வழிசெய்வம் (இந்தியா)

2

இந்தியார்க்கு நாமடிமை யென்றுவரும் இந்தி யின்றே

விந்தியத்தின் வடமருங்கே விரைந்து சேர உந்து நன்றே.(இந்தியா)

3

ஆரியத்துள் செந்தமிழ்க்கே அண்ணியதும் ஆங்கிலமே சீரியநல் லறிவுபெற்றுச் செழித்ததனால் ஓங்குவமே.

(இந்தியா)

294. இந்தியெதிர்ப்பார் எதிர்க்கட்சியார் என்னும்

பண்

காம்போதி

பேதைமை

ப.

என்ன பேதைமை! இந்தியை எதிர்ப்பார்

எதிர்க்கட்சி யென்கை.

து .ப.

கண்ணை மூடிக்கொண்டே காரிருளே யெல்லாம் என்னும் பூனையெண்ணம் இதைவிட நன்கே.

2.1

முன்னே மறைமலையார் முதலாய் இந்தியை

இன்னே புலவோரை இந்தியை எதிர்த்தால்

முத்தமிழ் முனைவர் முனைந்தே யெதிர்த்தார்.

ஏற்றவேலை நீங்கும் என்றே எச்சரித்தார்

2

241

தாளம் - முன்னை

(என்ன)

(என்ன)