உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 36.pdf/272

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

242

தலைமைப் பதவி தாங்கும் தமிழ்ப்புலவர்

தமிழை முன் காத்தல் தலையாய கடமை இலையெம் பணியே யிந்தியை யெதிர்த்தல்

இது தி.மு.க. வே எனவுண்டோ இடமே

இசைத்தமிழ்க் கலம்பகம்

(என்ன)

295. மதுரை அறுவாட் படுகொலை

பண்

புன்னாகவராளி

ப.

இது காந்தியமா? படு காலியமா?

தாளம் - முன்னை

•.1

கயற்கண்ணி யாண்ட மதுரையிலே

கயற்கொடி பறந்த மறுகினிலே

குயக்கொண்டான் சாகப் பகல்வலிமைக்

குலத்தமிழ்க் கீரன் நகரினிலே

(இது)

2

பாண்டியன் பைந்தமிழ்ப் பாடல்களே

ஈண்டிய மாடக் கூடலிலே

மூண்டிரு சமயப் போர்முனையில்

முழுதும் தமிழ்வெல் லூர்தனிலே

(இது)

3

பேரா யத்தின் அலுவலகம்

பெருந்தமிழ்ப் பற்றைக் கொலுங்கழகம்

தூராய்க் கொள்ளும் நெறிமுறையாம்

துன்புறுத் தாமை கடுஞ்சிறையாம்

(இது)

4

அமைதியாய்ச் சென்ற மாணவரை

அறுவாள் வெட்டே ஆனவரை

இமையவ ருங்கண் இமைத்தபுரை

இறவாப் பழியுல கிறுதிவரை.

(இது)