உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 36.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஞா. தேவநேயப் பாவாணர்

3

மொழியொடுமன் வரலாற்றின் மூலமெனுஞ் செல்வம்

முத்தமிழும் முதற்கழகம் முதிர்ந்திருந்த செல்வம் வழிவழியாய்ப் பாண்டியரே வளர்த்துவந்த செல்வம்

வள்ளுவனார் உலகவறம் வகுத்ததிருச் செல்வம் பொழிகடும்பாப் புலவர்பலர் புனைந்தவருஞ் செல்வம்

பொன்னுலக வின்பமிங்கே பொங்குகின்ற செல்வம் கழிபலவா மகமொழிகள் கலித்தெழுந்த செல்வம்

கன்னியென முன்னைநிலை காணநிற்குஞ் செல்வம்.

14. தமிழின் பதினாறு தன்மை

1

தொன்மையொடு முன்மை

தென்மையொடு நன்மை

தாய்மையொடு தூய்மை

தழுவிளமை வளமை.

2

எண்மையொடும் ஒண்மை

இனிமையொடுந் தனிமை

செம்மையொடு மும்மை திருமையொடும் அருமை.

3

இங்ஙன்பதி னாறு

இலகுந் தமிழ்க் கூறு

எங்குமேயிவ் வாறு

எடுத்துமிகக் கூறு.

13