உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 36.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஞா. தேவநேயப் பாவாணர்

2. 1

தேனேபோல் இனிதாம்நெய் தேடற்கெங்கும் முட்டும் தேரின் மருந்தாகும் தெரிந்தேயுள்ள மட்டும் ஆனாலும் தெவிட்டும் அளியும் அதிற் கொட்டும்

அறிவு மயங்கும்உள் அனலும்நரை கிட்டும்

2

கரும்பை யினிதென்று கண்டுசீனம் நின்று

கலத்திற் சேரர்தந்த கதைவரலா றுண்டு

(தானே)

விரும்பிய தைத்தின்ன விடலைப்பல்லே நன்று

வெம்மை அதன்சாறு விளைக்கும் தெரிஇன்று

(தானே)

3

தெளிவே பனஞ்சாறக் காரநீர்என் றாரும்

தீங்கள் நறாவென்று தெரியும்பத நீரும்

களியால் உணர்கொல்லும் கடும்பேரிசிவு நேரும்

காலங் குன்றவழி கோலும்அது பாரும்

(தானே)

4

தேவர்தம் அமுதென்று தெட்டுவதோ வம்பு

திரைகடல் மீதது திரியும்குதிரைக் கொம்பு

மூவர்தம் முன்னென்று மொழியும்அசுர் முன்பு

முயன்று கடைந்ததை முகர்ந்திலராம் பின்பு

(தானே)

23. தமிழின்பம்

‘கோரினவர மொசகுமைய' என்ற மெட்டு

பண் - (இராமப் பிரியம்)

ப.

பேரிலுந்தமிழ் இனிமைதங்கும் பேரின்ப வாரி

து. ப.

சாரும் எதுகை மோனை வண்ணம்

சற்றுந்தவறாது நண்ணும்.

19

தாளம் - ஈரொற்று

(பேரிலுந்)