உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 36.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34

2

குமரி நாட்டுத் தமிழே

கோணிப் பின்கொடுந் தமிழாய்ச்

சுமரி யத்தின் பின்னே

சுழன்ற தாரி யம்மே.

மேலை யாரி யத்தின்

3

மிகுந்த மூப்புக் கிளையே

கீழை நாவ லத்தில்

கிளந்த வேத மொழியாம்

4

வேத மொழியும் வறந்து

விளம்பும் தொகையும் உறந்து

ஓதும் கடுமை சிறந்து

உலக வழக்கும் இறந்து

5

போன நிலையிற் பெரிதும்

புணர்த்த பிராகி ருதமே

ஆன சமற்கி ருதமாம்

அரைச்செ யற்கைப் பதமாம்

6

மாக தியேபை சாசி

மருவு சூர சேனி

பேசு தமிழின் பாணி

பிராகி ருதநான் மேனி

ஆரி யத்தின் வழியே

7

அமைந்த எழுத்து மொழியாய்ச்

சாரும் சமற்கி ருதமே

சாற்று வடமா மொழியாம்

இசைத்தமிழ்க் கலம்பகம்