உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 36.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42

இசைத்தமிழ்க் கலம்பகம்

48. தமிழின் படிமுறைத் தாழ்வு

'மண்டலம் புகழும்' என்ற மெட்டு

1

இந்த வுலகினில் முந்தி யரியணை கொண்டது செந்தமிழ் நீடு பிந்தியா ரியரை யுந்தெய்வ மென்றுமேற் கொண்டதால் வந்ததுகேடு.

(இந்த)

2

தேவ மொழியென்று கோவில் வழிபடப் பாவிய தாரிய வாழ்வு கோவர சேயிதை ஏவிய பின்தமிழ் மேவிய தேபெருந் தாழ்வு

3

(இந்த)

நூலுங் கலைகளும் சாலுந் தமிழ்நின்று கோலும் வடமொழி பேர்ந்த மூலம் படிகளே போலுந் தெரிந்துபின் மீளு நிலையின்றித் தீர்ந்த

4

ஆரிய வன்சொல்லைச் சாரு முயர்வென்று வாரி வழங்கியே பேணிச் சீரிய செந்தமிழ் பேரிழப் புண்டது சோறென்று சொல்லவும் நாணி

5

தாய்மொழிப் பற்றெலாம் மாய்ந்துபோய் விட்டதால் தன்னது

(இந்த)

(இந்த)

வேறென்றே யில்லை

வாய்மொழி யிற்றைநாள் தோய்ந்தது முற்றுமே வண்ணமில்

வேறுபல் சொல்லை

(இந்த)