உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 36.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44

இசைத்தமிழ்க் கலம்பகம்

50. இறந்துபட்ட தமிழ்நூல்கள் ‘எப்படிப் பாடினரோ' என்ற மெட்டு

ப.

எத்திறம் இறந்தனவோ அத்திறம் அவன் அறிவான்.

அ. 1

முத்தமிழ் நூல்களும் முதுநாரை யுங்குருகும் வித்திய களரியா விரைவியாழ மாலையும்

2

சித்தரின் பொன்னாக்கமும் சிறந்த மருத்துவமும் எத்தகை யென்றுபண்டே எவருக்குந் தெரியாமல்

3

இன்னறு பாக்களும் இருபது வண்ணமும் எண்பெரு வனப்பொடு எழுநிலச் செய்யுள்களும்

4

(எத்திறம்)

(எத்திறம்)

(எத்திறம்)

ஏரணம் உருவமும் எண்ணொடு கணியமும் வாரணம் ஒன்றேகலை வகையெ(ல்)லாம் வாரியதோ

(எத்திறம்)

5

இடைக்கழகத் திருந்த எண்ணாயிர நூல்களும் கிடைக்காமற் போனதென்ன கிளந்த பெயரினோடும்

(எத்திறம்)

6

வேந்தரின் பேதமையோ விரிகடற் கொடுமையோ தீந்தமிழோர் வறுமைத் தீயோ பிறர்பகையோ

(எத்திறம்)

7

தில்லைப்பொன் னம்பலத்தில் தேவாரம் பெரும்பாலும் செல்லரித் திடச்சிவன் திருவுளங் கொண்டதென்னோ

(எத்திறம்)

8

ஆண்டுதொறுங் கூடி ஆடிப்பதி னெட்டாம்நாள் ஈண்டிவருங் காவிரி எறிந்ததமிழ் நூலெல்லாம்

(எத்திறம்)

9

பாண்டித் துரைத்தேவர் பாடுபட்டுத் தொகுத்த பண்டைத்தமிழ் நூல்கள்தீப் பற்றியே மதுரையில்

(எத்திறம்)