உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 36.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46

இசைத்தமிழ்க் கலம்பகம்

52. தமிழன் வீழ்ச்சி

‘பூமியில் மானிடர் சென்ம மடைந்துமோர்' என்ற மெட்டு

1

மாநிலத் தில்முனம் மற்றையர் யாவரும்

மல்கிய இருளில் மயங்கிய நாள்

மாநலத் தன்மனை மாணுற வாழ்ந்தவன் மருவிய குமரித் தமிழன்தான்.

2

குப்பை யுயர்ந்தது கோபுரந் தாழ்ந்தது குடிபுகுந் திரந்தவன் கோவானான்

ஒற்றுமை யில்லாமல் உலைந்துபோய்த் தமிழன்தான் ஊமை யடிமையென உழல்கின்றான்.

3

பட்ட மெனமிசை பறந்துபோய் மேலையர்

பரவெளி நாடும் காலமிதே

கட்டை வண்டிசெய்து கையிறாட்டை சுற்றிக் கரடுறு நூலிழைப் பான்தமிழன்.

4

பல்கலைக் கழகத்துப் பட்டமெல்லாம் பெற்றும் பாரெங்குஞ் சுற்றியும் பதவி கொண்டும்

தள்ளியே தான்தன்னைத் தாழ்ந்தவ னென்றெண்ணித்

தண்ணீருஞ் சிலர்க்கிடத் தயங்குகின்றான்.

5

ஆரியர் வருமுனம் அருந்தமி ழிருந்தநூல் ஆயிரக் கணக்கவை அழிந்தனவே

சீரிய தமிழ்க்கலை செயற்கையாம் வடமொழிச் சென்றுதிரிந் தயலாய்க் கழிந்தனவே.