உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 36.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஞா. தேவநேயப் பாவாணர்

55. அயன்மொழியால் தமிழ் கெடுதல் 'கொடியசைந்ததும் காற்று வந்ததா' என்ற மெட்டு

1

நோயிருக் கையில் வியாதி வந்தது

வியாதி வந்தபின் சீக்கு வந்தது

சீக்கி ருக்கவே பீமார் வந்திடும்

பீமார் வந்திட ஏமாறாதீர்கள்.

2

இப்படி யெல்லாச் சொல்லும் மாறினால்

எப்படித் தமிழ் இருக்கும் பின்னரே

தப்பாய் இந்தியால் தமிழ் கெடாதென்பார்

எப்போதும் தாம்மேல் இருக்க எண்ணுவார்.

56. தமிழ் ஏத்து

`கசமுக வதனா’ என்ற மெட்டு

U.

எழுங்கதிர் எனவே இணையில் தமிழும் இருளெலாம் ஒழிய எல்லே உமிழும்

உ. 1

(எழுங்)

வழுதியர் கடைசெய் வழுவினால் நீடு வடமொழிக் கடலுளே மறைந்து பிற்பாடு

(எழுங்)

2

இமைகலை நிறையும் எழில்மதி யுறையும் இலகுறு மறைமலை யிடையொரு முறையும்

(எழுங்)

3

உண்மையே மாற்றும் ஒன்னலர் விழவே

உலக முழுதுமுணர் உயர்ந்தவர் தொழவே

(எழுங்)

குறிப்பு : “இமைகலை... மறைமலை” என்பது இரட்டுறல்.

49